உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பொன்.தர்மா.

பொன்.தர்மா.

வணக்கம். சந்தம் சிந்தும் கவி நேரம். ********குடு குடு கிழவி ******* ""'""'"'''"’"""''"""""""""""""""""" வக்கணையாய்ப் பேசும் வாயாடிக் கிழவி அவள். வாயாலை புகைவிட்டே வங்காளமும் போய் வருவாள். செதுக்கிய சிலையாட்டம் , இளம் பருவக்,காலமதில். உருகியே , தடியாக , ஓய்ந்த இந்த, நேரமதில். வாயில் , தடதடக்கு , சொல்லில் பெரு மிடுக்கு . காலில் உறுதி வேண்டி , கம்பு ஒன்று கையில் பிடிப்பு. ஆடு , மாடு , பட்டியென , வருமானமும் அள்ளிக் கொட்டும். கோடிப் புறங்களெல்லாம், குலக்கு மாங்கனிகள் , தரை தட்டும். கொல்லைப் பக்கத்திலை , கோணலான ஒரு பட்டை . கோழிகளோ , கும்பலாகப் போட்டிருக்கும் , அதிலே , நிறைய முட்டை . சள்ளையிலே , சதிராடும் , சாயம் கழன்ற கறுப்புப் , பை . கிள்ளி அசை போட, அதற்குள்ளே நுழையும், அடிக்கடி , அவரது , கை . பெற்றுப் போட்டதுவும், கிழவியோ,எட்டுப் பத்து. ( ஆனால்) எடுபிடிக்கோ உதவுவது, பக்கத்து வீட்டுப் , பட்டு .... குடு குடு கிழவி... பொன்.தர்மா