உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பொன்.தர்மா

பொன்.தர்மா

வணக்கம் இது வியாழன் கவிதை நேரம். இல.526 ***** சித்திரை***** சித்திரையாள் வருவாள், முத்திரை பதிப்பாள். சத்தியமாய் அவள், சர்வமும் காப்பாள். சுற்றிடும் இடர்களை, வெட்டியே எறிந்திடுவாள். சுகந்தமாம் வாழ்விற்குத் , தூபமும் இடுவாள். வெற்றிகள் குவிக்கவே, வழிகாட்டியாய் நிற்பாள். வீணரின் செயலுக்குத், துறட்டியாக இருப்பாள். நயமது கிடைக்கவே, நாற்றிசையும், நல்மாரி பொழிவாள். தனம் , தானியம், யாவையுமே , தாராளமாகச் சொரிவாள். மனம் வைத்தே மகிழ்வோடு, உலகிற்காய் உழைப்பாள். மதிநுட்பத் திறனாலே, மகுடத்தை ஏற்றுவாள். பொன்.தர்மா