உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பொங்குவாய்

பொங்குவாய்

ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை தீரத் துதியிலே பொங்கி உண்டு வணங்கிய மாந்தரை வாங்கு வாங்கென நீண்ட தூரம் நாண்டு கொண்டு துரத்தித் துரத்தியே நீங்குவாய் வருடம் முடியுதெனப் போதித்து மங்கிய புகாரும் தேங்கிய நீர் வெள்ளமும் அடிக்கிற புயலின் பெருங் காற்றும் சுழன்றிடவே மூண்டு மூண்டே தங்குவாய் இரவு பகல் பயந்து விடியாது அனங்கியே தூங்காது பசிக் கொடுமை தாங்காது புசிக்க எதுவுமின்றிக் குடிக்க நீரின்றி சமைக்க விறகின்றித் தவிக்க கலைத்துக் கலைத்து நீயோ பொங்குவாய் .