உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பேராசை 115

பேராசை 115

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 08-09-2026 மண்ணில் வாழும் மானிடனே விண்ணைத் தொடவே ஆசையேனோ? கண்ணுறங்காமல் பொருள் தேடி கண்ணெதிர் அழிவைக் கண்டாயோ? காற்றைப் பையில் அடைப்பதற்கு கனவு காண்பது சாத்தியமா? அளவோடு பகிரும் நல்மனமே வளமோடு வாழத்தரும் அருளே ஆசையை அடக்கக் கற்றுக்கொள் -இந்த அகிலமே உனக்குச் சொந்தமாகும் பேராசை விலங்கை உடைத்தால், பேரின்ப வாழ்க்கை வசந்தமாகும். இயற்கை கொடையை இரசித்து -நீ இன்பத்தைக் காணக் கற்றுக்கொள், இல்லையேல் பேராசைக் காட்டுத்தீயில் இறுதிவரை ஆயுளை எரித்துக்கொள்.