உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பெண்கள் எழிற்சி

பெண்கள் எழிற்சி

“ பெண்கள் எழிற்சி “ கவி...ரஜனி அன்ரன் (B.A) 10.10.2024 உயிரின் தோற்றத்திற்கும் வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் முதன்மையாவள் என்றும் பெண்ணே பெண்ணின் எழிற்சிக்காய் மண்ணின் மலர்விற்காய் களமாடிச் சமராடி நஞ்சினை உண்டு வித்தாகிய முதல் மறவர் குலப்பெண்ணாம் மாலதியின் நாளாம் அக்டோபர் பத்தாம் நாளே ஈழப்பெண்கள் எழிற்சித் தினமாச்சு ! எழிற்சியின் வித்தாக புதுயுகப் பெண்ணாக புதிய சரிதம் எழுதிய புதுமைப் பெண்ணாம் மாலதி விடியல் பாதைக்கு வழிகாட்டி வரையறை ஒன்றை வரலாறாக்கினாளே ! இன்று அரசியல் சமூகம் பொருளாதாரம் அறிவியல் இலக்கியம் மருத்துவம் சட்டமென அத்தனை துறைகளிலும் பெண்ணினம் அபார வளர்ச்சி இனத்தின் விடியலுக்கான முதற்படியே பெண்ணின் எழிற்சி தொட்டில் ஆட்டிய கையே இன்று உலகை ஆழும் கை பெண்கள் எழிற்சியே புரட்சியின் வெற்றி பெண்கள் எழிற்சியே சமூகத்தின் வளர்ச்சி ! https://www.youtube.com/watch?v=XD-t7BHI3go