உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

புலவர்மணி இளமுருகனார்

புலவர்மணி இளமுருகனார்

ரஜனி அன்ரன் (B.A) “புலவர்மணி இளமுருகனார்“ 12.06.2025 ஈழத்து தமிழறிஞர் தமிழ் உணர்வாளர் தமிழாசான் நாடகஆசான் கண்டனஆசானென பன்முகத் திறமைகொண்ட புலவர்மணிஐயா நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் புதல்வர் நவாலியில் உதித்தாரே ஆனித்திங்கள் பதினொன்றிலே ! செந்தமிழ்மரபு சிதைந்து போவதுகண்டு நொந்தார் மனம்வெந்தார் புலவர்மணிஐயா கட்டுரைகள் கண்டன உரைகளென சட்டெனவே எழுதினார் வாரப்பத்திரிகைக்கு பண்டிதர் பரீட்சையும் எழுதிப் பண்டிதராகி பாடநூல்கள் பலதையும் யாத்து பண்டிதர்கள் பலரையும் உருவாக்கினாரே ! தமிழுக்கு பாதுகாப்புக் கழகத்தையும் நிறுவி தனித்தமிழின் தூய்மையை நிலைநாட்டி தமிழுக்கு கவிதை உரைநடையென்று படைப்புக்கள் பலதையும்தந்து கலைச்சொல் ஆக்கத்திற்கு பணியுமாற்றி தொண்டுகள் செய்தாரே தமிழுக்கு! https://www.youtube.com/watch?v=wBF8F2bDkeA