உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

புனிதா கரன் UK

புனிதா கரன் UK

தைப் பொங்கல் ————————- தமிழர் திருநாளாம் தை திங்களிலே// சாதிமத பேதமின்றி களித்திடுவோம் அந்நாளை// உலகிக்கே உணவளிக்கும் உழவனுக்கு உதவிடும்// கதிரவனைப் போற்றி கால்நடையை வணங்கி// நன்றி கூறிடும் நலமிகு பெருநாளே// பழையன கழிதலும் புதியன புகுதலுமென// எம்மில் உள்ள தீயகுணங்களை அகற்றி// நற்குணங்களை வளர்த்திடல் சாலச் சிறப்பே// தை பிறந்தால் வழி பிறக்குமென// நம்பிக்கை வளர்த்திட நல்வாழ்வும் மலருமே// வள்ளுவன் போற்றிய பெருமைமிகு தொழிலாம்// உழவு தொழில்தனை உளமகிழ்ந்து போற்றி// பண்பாட்டு விழுமியமும் பாரம்பரிய சிறப்பும்// பொங்கி மகிழ்ந்திடவே பொங்கலைக் கொண்டாடுவோம்/ நன்றி புனிதா கரன்