உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

புனிதா கரன் கவிதை 05

புனிதா கரன் கவிதை 05

புனிதா கரன் கவிதை 05 நவின உலகிலே நாகரிக மோகமே// அச் சுறுத்துதே தொழிநுட்ப வளர்ச்சி// உயிரைக் குடித்திடும் கொடிய நோய்களே// வையகமெங்கும் பரவியே வாழ்வை பயமுறுத்துதே// கவலை வாட்டும் கொடிய நேரத்திலே// உயிர்நேயம் மாந்தனிடம் ஊமையானது ஏனோ??// நம்முன்னோர் போதித்த நற்சிந்தனைகள் எங்கே??// காற்றிலே பறக்க கடமை தவறினோமே// ஆபத்தைக் கண்டு உதவிட உள்ளம்// புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிடுதே// மனதில் சிறிதும் ஈரம் இன்றியே// எளியோரை வதைத்து ஏற்றம் கண்டிடும்// வலிமை படைத்த வல்லரசும் உண்டே// அமைதியாய் அகிலம் அனுதினம் சுற்றிட// அன்பால் இணைந்தே அறவழியில் நடந்திடு// புனிதா கரன் கவிதை 05 UK