உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

புதிய தலைமுறை

புதிய தலைமுறை

ராணி சம்பந்தர் பலமுறை கண்ட தலைமுறையோ வரைமுறையின்றி விரைந்தோடும் புதிய நடைமுறையில் நிலைகுலைய வீதி நடுவே சிலையானது கேவலம் அதிக எதிர்பார்ப்பும் மோதும் சவாலும் குதர்க்கமான விவாதக் குழப்பமோடும் அமர்ந்தபடி பணந்தேடும் புழுகுமூட்டையும் கறைபடியும் வாழ்வின் முறையற்ற அவலம் எந்தப் பாதை போவது சரியாகத் தெரியாது அந்தப் போதையில் மன அழுத்தம் புரியாது அறிவுரையோ ஆலோசனையோ கேளாது தறிகெட்ட மனிதர் தம் வலிமை அறியாது முடங்கியது துரதிர்ஷ்டம் பெரும் பேரவலம் .