உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பண்டிகை வந்தாலே

பண்டிகை வந்தாலே

பண்டிகை வந்தாலே பண்டிகை வந்தாலே பரவசம் பாருமே // இங்கிதமான ஆனந்தம் இகமதில் கேளும் // சங்கீத ஸ்வரமாய் இசைப்பார்கள் கூடியே // பண்டிகையில் பூத்தாடை எடுப்பதும் மகிழ்வே // சின்னஞ் சிறுசுகள் சிங்காரச் சிட்டுக்கள் // களிப்புடன் பட்டாசும் கொழுத்தியே விளையாட்டும் // பட்டங்கள் எற்றுவதும் சவாரிகள் ஓட்டுவதும் // போட்டிகள் வைப்பதும் வெற்றிகள் ஈட்டுவதும் // எத்தனை நிகழ்வுகள் கலாச்சாரக் கொண்டாட்டம் // ஆடல் பாடல் கூத்து நாடகமென்றும் // ஆங்காங்கே தோன்றும் அரங்குகளிலே கண்மலரவும் // வந்தாலே இத்தனையும் நடக்கும் ஆனால் // உண்ணவும் உணவின்றி உறங்கவும் இடமின்றி// வாழவும் வழியின்றி வாடும் நெஞ்சங்களுமுண்டு // துன்பத்தின் சாரலில் நனையும் நிலையில் // எத்தினம் வந்தாலும் இருண்ட இரவாகும் // காலத்தின் லீலைகள் கழிப்பதும் கலங்குவதும் // அத்தனையும் நீங்கிடவே ஆண்டவன் அருளட்டும்// சிவருபன் சர்வேஸ்வரி