உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பணி 89

பணி 89

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 04-11-2025 கண் விழிக்கும் வேளைதனில் காத்திருக்கும் உன் பணி கடமையை உணர்ந்து செயல்படு காலத்தால் அழியாது உந்தன் உயர்வு ஓடும் நதியாய் ஓடி நீவிர் ஓயாமல் பணி செய்வாயே காலம் கடந்தும் சரித்திரம் பேசும் கைப்பட ஈட்டிய பணி என்றே உள்ளத்தினால் உழைப்போமானால் உலகில் உன்னதமாய் உயர்ந்து நிற்கும் கள்ளம் இல்லா நட்புமிங்கே கடல் போல் நிலைக்கும் என்றும் உழைப்பில் மனச்சாட்சி இருக்கட்டும் ஊர் வளர்ச்சியில் மாற்றம் பிறக்கட்டும் இதுவே உலகின் சிறந்த பணி இனிப்பாய் பாரினில் வைக்கும் இனி!