உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பணம்

பணம்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-31 09-04-2024 பணம் பணம் கண்டு பூமி சுழலவில்லை பாசம் கொண்டு நீ நடந்திடு மனமுவந்து அள்ளிவழங்கிடு மாற்றாரை உறவாய்ப் புரிந்திடு அன்பான உறவையும் தந்திடும் அள்ளிப் பகையையும் கொட்டிடும் தூக்கியும் தாங்கியும் கொண்டாடும் அதர பாதாளத்தில் தள்ளிவிடும் பகிர்ந்த பணத்தில் பாசம் நிலைக்கும் சேர்ந்த பணத்தால் சாதி ஜெயிக்கும் பணம் கொண்டு விலைபேசும் மானிடனே இனம் கண்டு வாங்கிடு நிம்மதியினை உணவின்றி வாழும் மக்களுக்கு உதவு ஏழை, பணக்காரன் ஏனிந்த வகையாம் ஏடெடு படித்து நீ உலகினை மாற்று. பணம்மட்டும் வாழ்வில்லை புகட்டிடு நீயும். நன்றி வணக்கம் ஜெபா ஸ்ரீதெய்வீகன்.