உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பசுமையான நினைவுகள்

பசுமையான நினைவுகள்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-39 24-10-2024 பசுமையான நினைவுகள் பசுமையான நினைவுகள் பசுமரத்தாணிப் பதிவுகள் ஆடிப்பாடி விளையாடிய தருணங்கள் அகம் குளிர்ந்த காலங்கள் ஒரு வீட்டில் அடுப்பெரித்து ஊரெல்லாம் பசியற்று உறவெல்லாம் ஒன்றாய்க் கூடி உலக நடப்பறியும் பொற்காலம்! நண்பி வீடும் என்வீடாய் நல்லது கெட்டது பகிர்ந்து குடையை மடக்கி மழையில் நனைந்து குதுகலமாய் வாழ்ந்த காலமது! மரத்திலேறி பழம் பறித்தோம் மாடு கன்று மறித்து நின்றோம் உடன்பிறப்பின் உதவியெல்லாம் நிழலாய் வருமே எம்முடனே… தாத்தா பாட்டி உறவெல்லாம் தங்கமாய் காத்து வந்தோம் உற்றார் உறவுகள் கூட ஊர் போற்ற மதித்து நின்றோம் வீதிப் பிரச்சனை ஏதுமென்றால் வீடு வந்திடும் எமக்குமுன் தந்தை முகத்தின் கண்டிப்பில் தயங்கி தாயை அணைத்திடுவோம். நன்றி வணக்கம் ஜெபா ஸ்ரீதெய்வீகன்.