உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நெருப்பு நினைவுகள்.....

நெருப்பு நினைவுகள்.....

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய் வந்து கனக்குதுமனசு வெறுப்பையே தந்த கறுப்புயூலை மறுப்பல்ல உண்மையிது ஆண்டுகள் நாற்பத்திமூன்று கடந்தபோதும் நெருப்பின்சூடு இன்னும் தணியவில்லை ! சாலைகளிலும் சிறைச்சாலைகளிலும் தெருவீதிகளிலும் வீடுகளிலும் கொடூர தாக்குதல்கள் இழந்த உயிர்களின் நினைவுகளும் இழப்புகளும் ஒவ்வொரு யூலையிலும் குடையுதே நெஞ்சினை கறுப்புயூலையின் நெருப்பு நினைவுகள் கடந்துவந்த நெருப்பாற்றின் நீளப்பெருவழியே ! வன்முறையொன்று விட்டுச்செல்லும் வடுவின்தளம் இனத்தையே கருவறுத்த கறுப்புயூலை வெறுப்புயூலையே நெருப்புக்குள் பொசுங்கிய கொடூரமும் திட்டமிட்டகொலைகளும் கட்டம் போடவைத்ததே அடுத்தகட்டத்திற்கு நீதிக்கான வலுவையும் தந்துநின்றதே இன்னொருமுறை மீண்டும் வேண்டாமேயிது ! https://www.youtube.com/watch?v=2Cb9qCOQP5w