உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நூற்றாண்டுவிழாக் கண்ட மாதரசி

நூற்றாண்டுவிழாக் கண்ட மாதரசி

“ நூற்றாண்டுவிழாக் கண்ட மாதரசி “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 16.01.2025 நெற்றியில் திருநீறு நேர் கொண்ட பார்வை கணீரென்ற குரல் கம்பீரமான பேச்சு கருணை கொண்ட தாயுள்ளம் இத்தனைக்கும் சொந்தக்காரி எங்கள் சிவத்தமிழ்ச் செல்வி தைத்திங்கள் ஏழினில் நூற்றாண்டு விழாக் கண்டாரே ! அன்னையர்களுக்கெல்லாம் அன்னை ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்புத்தாய் ஆன்மீக சொற்பொழிவின் வித்தகி ஆலயத்தின் அறங்காவலர் ஆன்மீகப் பாதையின் வழிகாட்டி அன்னை சிவத்தமிழ்ச் செல்விக்கு அன்னபூரணி மண்டபத்தில் ஆறுதிருமுருகன் தலைமையில் அழகாய் அரங்கேறியதே நூற்றாண்டுவிழா ! தமிழுக்கு கிடைத்த தனிப்பெரும் சொத்து மாதர் குலத்தின் மணிமகுடம் மதங்கள் கடந்த மானிட நேசிப்பின் தாய் சக்தியிலும் பக்தியிலும் மிஞ்சிய பக்தை ஆசிரியப்பணி அருந்தமிழ்ப்பணி அறப்பணியென அன்னையின் பணிகளோ அளப்பெரியதே https://www.youtube.com/watch?v=hxwz5PYzn2E