உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நீங்காத நினைவுகள்

நீங்காத நினைவுகள்

கவிதை 800 காலங்கள் கடந்தாலும் காட்சிகள் அழிந்ததோ நேரங்கள் கரைந்தாலும் நிழலதும் மறைந்ததோ நீங்காத நினைவுகள் நெஞ்சத்தில் உறங்கியதே தூங்கியவை விழித்தெழுந்து மீண்டுமதை மீட்டுதே தாயன்பின் தாலாட்டு காதுகளுள் ஒலிக்கிறதே சிறுவயது சம்பவங்கள் கண்முன்னே நிழலாடுகின்றதே நண்பர்களின் குறும்புகள் எண்ணத்தில் அகலவில்லை முதற்காதலும் புதைந்த நினைவுகளுள் கலையவில்லை தொலைந்த முகங்களாயினும் வார்த்தைகள் ஒலிக்கின்றன செல்லமுடியாத பாதைகள் நினைவுகள் வாழ்கின்றன திரும்ப கொண்டுவர முடியாதெனினும் காலத்தை வாடாத மலரெனவே நீங்காத நினைவுகளும் ஜெயம் 14-05-2026