உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நிழல் தேடும் வேளை

நிழல் தேடும் வேளை

கவிதை 808 வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது நிழலின் தேவை மனிதர்க்கு நிழல் தரும் மகத்தான மரங்கள் குளிர்ந்த நிழலை தேடும் உயிர்க்கெல்லாம் வரங்கள் வாழ்க்கையும் வெய்யிலைப்போன்றே துன்பங்கள் வந்தே சேரும் வாட்டும் நேரங்கள் சோர்வினை கூட்டி கொள்ளும் அப்போது நிழலாய் அன்பின் உறவும் பார்க்கும் துணையாய் கரம் தாங்கி வலியினை போக்கும் வெய்யிலின் போதுதான் நிழலின் அருமை புரியும் துன்பத்தின் போதுதான் உண்மை உறவுகள் தெரியும் ஜெயம் 02-07-2026