உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நிழல்தேடும் வேளை.....

நிழல்தேடும் வேளை.....

ரஜனி அன்ரன் (B.A) நிழல்தேடும் வேளை...02.07.2026 வெய்யிலின் உக்கிரம் உலகை உலுக்கும்போதுதான் நிழலின்அருமை தெரிகிறது பிரமாண்டமாய் வானத்து வெய்யோனும் வறுத்தெடுக்க பூமித்தாயவளும் வெந்துபுளுங்கிட அனல்காற்றும் தீய்த்துக்கொள்ள அக்கினிப் பெருநாளின் உச்சிப்பொழுதினில் நிழல்தேடி அலையும் வேளையிது ! சுட்டெரிக்கும் சூரியனின் சுடுநெருப்பால் சுருங்கிப் போகிறதே ஜீவராசிகளின்வாழ்வு வரலாறு காணாதவகையில் ஐரோப்பிய நாடுகளும் வகை தொகையின்றிப் பாதிப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் உயிரிழப்பு நிழல்தேடி ஆறுகுளம்நாடி மக்களும் படையெடுப்பு ! அன்று தருக்களை வெட்டிச்சரித்தோம் அகந்தைகொண்டு காடுகளை அழித்தோம் அனல்வெப்பம் தாங்கமுடியாமல் – இன்று அதேமரத்தில் நிழல்தேடும் வேளையிது நிழலின்அருமையை வெய்யிலில் உணர்ந்தோம் தருக்களின்பெருமையை தாகத்தில் உணர்ந்தோம் ! https://www.youtube.com/watch?v=vqA5qOBf770