உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நிழலாடுதே நினைவாயிரம் 83

நிழலாடுதே நினைவாயிரம் 83

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-01-2026 காலங்கள் கரைந்த பின்பும் கரையோரம் ஒதுங்கும் சுவடாய் நிமிடம் தோறும் நெஞ்சில் நிழலாடுதே நினைவாயிரம் குடை மடித்து மழையில் நனைந்ததும் குதுகலமாய் சுற்றித் திரிந்ததும் பகிர்ந்து உண்டு மகிழ்ந்ததும் பாசமாய் வலம் வந்ததும் தடுக்கி விழும் முன்னே தாங்கிய உங்கள் கைகளும் தனிமையை உணர்ந்ததில்லை தமையனே உன் அரவணைப்பில் தோல்விகள் எனை நெருங்கையில் தோள் கொடுத்தவனே காலனும் கவர்ந்து சென்றானோ கனிவான அந்தச் சிரிப்பை தந்தை பாதி, தாய் பாதியாய் தன்னலமற்ற அன்பின் உருவமாய் நெஞ்சம் கனக்கும் நேசமாய் நிழலாடுதே நினைவாயிரம் அண்ணா!