உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நியதி

நியதி

ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே விதி தொலைவிலேயே இருக்குமதே அறிமுடியாத நியதி மண்ணுலகில் வாழுக்கின்ற மானிட கூட்டம் உண்டுவிடும் உணவுக்காக உழைக்கவென போராட்டம் இறைவனால் விதிக்கப்பட்ட வாழ்க்கையின் திட்டம் மறைத்துவிட்டார் தெரிவது அவருக்கு மட்டும் அறியாது வாழ்க்கையை அங்கலாய்ப்பவர்கள் கோடானகோடி அறியாத வாழ்க்கையோ கிடைக்குதங்கே மூடி தூண்டிலில் சிக்குமட்டும் வித்தையை காட்டுகின்றார்கள் தூண்டிலே விதியாக துடிதுடித்து மாட்டுகின்றார்கள் துன்பங்கள்மாறி இன்பங்கள் வாழ்க்கையின் நியதி முன்ஜென்மம் செய்ததைக்கொண்டு அமைந்துவிடும் வசதி மாற்றவே முடியாது விதிபோட்ட கணக்கை ஆற்றலுள்ள மதியும் தீர்த்துவிடாதிந்த பிணக்கை ஜெயம் 30-08-2025