உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நினைவுகள் கனக்கின்றன..

நினைவுகள் கனக்கின்றன..

வியாழன் கவி -2250 “நினைவுகள் கனக்கின்றன” சுமந்த வயிறுகள் சுகமிழந்து துயர் நிறைந்து கிடக்கிறது சுழல் காற்று அடித்து ஓய்ந்த வயல் வெளிபோல் எங்கும் சின்னா பின்னமாய்க் கிடக்க ஆண்டாண்டு காலமாய் அழுதழுது வீங்கிய விழிகள் கண்ணீர் தான் வற்றி போனது.. கல்லறைகளுக்குள் துயின்றவர் செல்லரித்துப் போன ஏடுகள் போலும் சிதைந்தழிந்து போக வக்கிரத்துள் எதிரி படை சர்வ நாசம் செய்து போயின இருப்பவர் இன்னும் தேட இருப்பறியா உறவுகள் நிலை தொடர்கதை தானே பூமியில் கனக்கும் நினைவுகள் இன்னும் கனத்தபடி தொடருதே.. சிவதர்சனி இராகவன் 27/11/2025