உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நினைவின் வடு (615) Selvi Nithianandan

நினைவின் வடு (615) Selvi Nithianandan

நினைவின் வடு முள்ளி வாய்க்கால் நினைவின் வடு முடிவின் நாளும் பதிவின் ஏடு மூர்க்கத் தனமாய் போட்ட குண்டு தீர்க்கத் தினமாய் எரியுது இன்றும் இளமை முதுமை பச்சிளம் குழந்தை இதுவரை பலருக்கு புரியாத விந்தை இலங்கை இந்தியா கூட்டுப் பட்டறை இரகசிய இணைவாய் மறைமுக பயிற்சி ஈழப்போரில் உயிர்கள் இழப்பு ஈடுகொடுத்த அப்பாவிகள் இறப்பு பதின்னைந்து ஆண்டும் வந்ததே பதறும் உறவுகளும் நிலையாய் குண்டுச் சத்தம் அழகுரல் ஓசையும் குவிந்து கிடந்த மனித உடல்களும் குழிதோண்டி புதைக்க யாருமற்றவராய் குருதி படிந்த நாளாய் இன்னமும் வருகுதே