உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நினைவின் ஓரத்தில்..

நினைவின் ஓரத்தில்..

வியாழன் கவி 2284!! நினைவுகளின் ஓரத்தில்..!! மறத்தல் அரியதாய் மனதிலே இறத்தல் வரை தொடரலாம் கரையும் பனியின் வீரியமோ கலந்தால் மனிதம் சிறக்குமே மூளையின் நரம்பு இறுக்கத்தில் மூலையின் ஓரமாய் குந்தும் இளமை கால நடப்பின் சில இரக்கம் அற்றே பயணம் போகும்.. நன்றி மறத்தல் நலமல்லவே அன்றி நல்லதை தேக்கலாம் நோயின் பிடிக்கும் காரணமாம் வாயின் வழியே பயணிக்கும்.. சிவதர்சனி இராகவன் 5/2/2026