உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

“நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்”

“நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்”

விலையில்லா நிலமிதிலே நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டா நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்குமென சும்மாவா சொன்னாங்க பெரியவங்க நம்ம நிலமைக்கு மேல நினைப்பு வந்தா அளவுக்கு மேல ஆசை வந்தா நிம்மதி இருக்காது உள்ளதும் நிலைக்காது இருக்கிறதை விட்டு விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட்டா கான மயிலாட பாத்து நின்ற வான் கோழி தன்சிறகை தான் விரித்து ஆடும் கதை ஆகிடுமே பாலும் சோறும் வேணும் பஞ்சு மெத்தை தூக்கம் வேணும் பட்டாடை கட்ட வேணும்பவுசாக வாழவேணுமென்ற நினைப்பெல்லாம் மரமேற முடியாதவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதை போல கூழோ கஞ்சியோ வயறார குடிச்சுப் புட்டு கட்டாந் தரையினிலே நிம்மதியாய் தூங்குவதே மகிழ்ச்சியான வாழ்க்கையன்றோ… நன்றி வணக்கம்