உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்... நினைப்பதற்கு எண்ணம் மனதிலே வகுத்து தினையது முளைப்பதாய் சிந்தனை முளைத்து பனைபோலப் பெருகி பக்கவமாய் வளர்ந்து மனைபோலக் கட்டுமே மாண்புமிகு சிந்தனை சிந்தையின் நினைவும் சிதறும் எண்ணங்களும் விந்தையாய் உலகில் வினைத்திறன் விளைவே! சுந்தர வடிவ சுடர்விடும் எண்ணமே மந்திர வடிவ மாண்புறு செயலே! நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்..... மனதிலே மகிழ்வு மாற்றமாய் உருவாகும் கனவிலே காரியம் காட்சியாய் பெருகும் குதூகல மெங்கும் பூத்து விரியும் கூடவே வரவுகளும் கொட்டி கிடக்கும் நகுலா சிவநாதன் 1797 https://youtu.be/IJPAVLVUb88?si=UTU9_LPbgNw9hJmg