உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்........

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்........

நினைப்பதெல்லாம்.....கவி....ரஜனி அன்ரன் (B.A) 20.02.2025 நினைவென்ற ஒன்று இல்லாவிடில் கனவுகளுக்கும் அர்த்தமென்று எதுவுமில்லை கனவு காண்பதும் கற்பனையில் மிதப்பதும் கனவாகிட நினைவு மட்டுமே நமக்காகிட நடப்பதும் விடுவதும் ஆண்டவன் செயலே நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் அதிசயமே அதிசயம் தான் ஆச்சரியம் பூச்சொரிய ஆகாயம் குடை விரிக்கும் ! எண்ணங்கள் சிறகடிக்க ஏற்றங்கள் வலுவாக வண்ணங்களால் வாழ்வு வளம் கொழிக்க நினைப்பதெல்லாம் நிகழ்ந்து விட்டால் வாழ்க்கைப் பாதையும் மாறிட வாழ்வே சொர்க்கமாகி வனப்பாகுமே ! நிறைவேறா ஆசைகளும் நிறைவேறும் கறை படிந்த மனசுகளும் கலகலக்கும் நித்திலமும் புத்தெழிலைப் பெற்றிடும் நீல வானத்தையும் தொட்டிடலாம் கால நதியினிலும் நீந்திடலாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் ! https://www.youtube.com/watch?v=K44zceMsJdA