உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நாம் பொம்மைகள் மட்டுமே

நாம் பொம்மைகள் மட்டுமே

கவி 746 நாம் பொம்மைகள் மட்டுமே ஆடிப்பாடும் இந்த உடலும் எமதில்லை ஓடித் துடிக்கும் ஆவியும் எமதில்லை கூடுவிட்டு ஆவிபோயின் பெயரும் பிணம் காடுகொண்டே எரித்துவிடும் கூடவிருந்த சனம் நித்திய வாழ்கையென்று எண்ணியது பொய்யானது அத்தினம் வந்தால் ஓய்வென்பது மெய்யானது வந்தவரெல்லாம் தங்கிட வேண்டியே ஆசை தந்திரங்கொண்ட விதியோ ஒருநாள் நடத்திடும் பூசை விலையுயர்ந்த வசந்த மாளிகை இங்கே மலைபோல் குவித்த காசுபணம் அங்கே பாரிவரை கயிறறாத வாழ்க்கையென்று ஆட்டம்பாட்டம் ஓரிரவில் ஓடிவிடுமந்த உயிரைவைத்து ஆர்ப்பாட்டம் சோம்பலை முறித்து அனுதின ஓட்டம் சாம்பலாய்ப் போகும் ஐந்தடியின் ஆட்டம் பூக்களாய் பூத்தும் வாடாதெனும் கருவம் தீக்குளிக்கும் நாளதை அறியாத உருவம் வாடகை வீட்டில் எத்தனை காலம் நாடகம் இன்னும் எதுவரை நீளும் என்பது யாருக்கு எவருக்குத் தெரியும் மண்ணாலான பொம்மைகளை செய்தவருக்கே புரியும் ஜெயம் 23-10-2024