உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நான் வாழ்கிறேனா………..

நான் வாழ்கிறேனா………..

என் மரணமும் வலியும் தொடர்கின்றன……. மௌனத்தின் பிடிக்குள் கரைகிறேன் உணர்வுகள் என்னை உராய்கின்றன உண்மையான நல்ல நடிகன் நான் தினம் தினம் என்னை அலங்கரிக்கிறேன் தீச்சுவாலையின் கங்குகள் அனல்கக்குகின்றன போலியான விவரணங்களுள் வாழ்க்கை மாயத்திரைகளின் மறைவுகளுள் தினக்கதை எதை எப்படி எங்கு விபரித்தெழுதிடுவேன் ஊசலாடிக் கொண்டிருக்கும் உயிர் விழுதுகள் சீவனைத்தீண்டிதொட்டெழும் உதிரத்தொடுகை நியாயத்தின்கோடுகள் எங்கே அழிந்தன புரியாத மனிதர்கள் புரியப்படாத வரைபடங்கள் வக்கிரத்துள் வரித்தெடுத்த ஒவ்வோர்இழைகள் பணமும் சுகமும் சொத்தும் எழுதாது என்வாழ்வை அட என்ன மனிதர்கள்இவர்கள் நாளைபற்றிய புரிதல் இல்லா கோமாளிகளாய்……..