உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நாதன் கந்தையா

நாதன் கந்தையா

#பஞ்சம் வயிறொட்டி விழி பிதுங்கி வண்ணம் அது மாறி நெறி கெட்ட உடலிருந்தால் பசி கொண்டு பட்டினியால் - அது நடந்த தென்று பெயர். சோமாலியாவென்றால் காமாலை யது விருக்கும் கூழில்லா வேறு வயிற்றில் கோரமிலம் நிறைந்திருக்கும் உப்பிய வயிறுருந்தும் ஒறுத்தே உணவிருக்கும். நீ உழைத்து உயர்ந்தாலும் நாடு செத்துபோனதென்றால் காடு பற்றி அதுபோகும் கொலை களவு பெருகிவரும் ஊழ்வினை அதுவென்று -உலகம் வெறுத் தொதுக்கிவிடும் பிணமொன்று தினமசையும் - பெற்ற பிள்ளை மலக்குழியில் விழும் அறிவு பிசகிவிடும் ஆன்மாவும் செத்துவிடும் போராடு தூக்கியெறி புணர்ச்சியில் கிடந்துளறும் பொறுப்பில்லா அரசனைத்தான்.