உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நட்பென்றாலே 94

நட்பென்றாலே 94

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 30-07-2026 நட்பென்றாலே நலனில் நம்பிக்கை நயந்திடும் நிற்பதெல்லாம் நிழலாய் நின்று நிம்மதியாக்கும் வார்த்தையில் வடிக்கா விழிகளின் மொழி பார்க்கையில் புரியா பரவச தெளிவு உதிர உறவல்ல உணர்வின் உறவு இதய மொழியிது இணைப்பின் பிறப்பு காலச்சக்கரம் கண் எதிரே நகர்ந்தாலும் காலம் கடந்தாலும் கலையாத கனவு துயரம் துடைத்து வைரமாய் மிளிரும் உயரம் உணரா உறவாய் வளரும் அள்ளி அன்பைப் பொழியும் அருவி பள்ளிப் படிப்பிலிருந்தே தொடரும் நட்பிதுவே