உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நட்பென்றாலே

நட்பென்றாலே

இரா்விஜயகௌரி உற்ற வேளை உறுதுணையாகி சுற்றம் தேடா சுகநலம் பேணி கனிவுடன் எழுதும் காதலாய் அன்பொடு தோளை அணைத்து செல்வதாம் நட்பு பணமும் பொருளும் பதவியும் மீண்டெழு பொருளாதாரமும் அத்தனை விடுத்து அகமுறு நட்பு அகத்தினுள் நிறைத்து ஆராதிக்கும் செவிவிழு சேதி நலிவுறாவண்ணம் சேவித்தெழுந்து ஆவன நல்கி உயர்வுறு பாதை அமைத்திட ஆங்கு படியாய்நின்று பக்கத்துணயாகும் இதயம் சுமக்கும் இடர் வரும்வேளை முன்னே நின்று முதுகெலும்பாகி அன்புடன் அணைத்துஇடருறா வண்ணம் இயல்புற நடக்கும் எதிர்பார்ப்பின்றி