உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நகைப்பானதோ மனித நேயம்

நகைப்பானதோ மனித நேயம்

வியாழன் கவி 2255 நகைப்பானதோ மனிதநேயம்.. புனிதம் போற்றும் மானிட பூமியில் புதைந்து போனது மனித நேயம் உணர்வுகள் அற்றதாய் உறவுகள் கலந்தாட மறந்தது மகிழ்வு தேசம்.. முதுமையும் தெருவில் அல்லாடுதலும் முனகலில் பரிதாபம் புரியாமலும் பிறந்த தேசத்தில் விரட்டப்பட்டும் பயணத்தில் உயிர் துறப்பதுமானது.. காத்தலும் கை கொடுத்தலும் விலக கருணையும் காத்தலும் மறைய சிரிப்பும் சிந்தனையும் விலக ஆயுதமும் அணுகுண்டும் பெருகியது.. விழி நீர் துடைக்க நீளட்டும் கரமது அழிக்கும் மழை நீரில் காக்கட்டும் இடரில் இரங்கியே கரை சேர்க்கட்டும் மனித நேயம் மீள மலரட்டுமே.. சிவதர்சனி இராகவன் 11/12/2025