உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

" நகைப்பானதோ மனிதநேயம் "

" நகைப்பானதோ மனிதநேயம் "

ரஜனி அன்ரன்“ நகைப்பானதோ மனிதநேயம் “ 11.12.2025 ஏற்றத்தாழ்வுகள் அகல வேற்றுமைகளும் ஒழிய நல்லிணக்கம் சிறக்க நியாயங்கள் பிறக்க அமைதியை நிலைநாட்ட அமுலானதே மனிதநேயம் இன்றோ இனம் மதம் மொழியென்று இறுகிக் கிடக்கிறது மனங்கள் மண்டியிடுகிறது மனிதநேயம் ! அன்பு என்பது அலங்காரப் பொருளாக அறமென்பது வெறும் அறிக்கையாக அனர்த்தங்களின் போது வேடிக்கை பார்ப்பது ஒருவரின் வேதனையில் மற்றவர் சிரிப்பது தியாகத்தின் பெருமையினைக் கொச்சைப் படுத்துவதென சமூகவலைத் தளங்களில் பேசுபொருளாகவும் இடர்பாடுகளிலும் நகைப்பாகுதே மனிதநேயம் ! ஆனாலும் இயற்கையின் சீற்றத்திலும் இடிபாடுகளிலும் சிக்கித்தவித்தோரை சீக்கிரமாய் மீட்டெடுத்து தம்முயிரையே பணயம் வைத்து உறவுகளை மீட்ட உன்னதநேயம் மிக்கவர்களை நினைக்கையில் இன்னமும் மனிதநேயம் உயிர்ப்போடு இருப்பதை உணரமுடிகிறது எம்மால் ! https://www.youtube.com/watch?v=4bvIMl1hvYY