உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தொலைந்த புன்னகை 96

தொலைந்த புன்னகை 96

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 24-09-26 கண்ணாடி முன் நிற்கையிலே காணவில்லை அந்த முகம் காலம் கொண்டு சென்றதுவோ? கள்ளமற்ற என் சிரிப்பை ஒருகாலம் பூத்த முகம், ஒளியிழந்து போனது ஏனோ? ஊர் நினைவும் கொஞ்சம் ஊசலாடிச் செல்கிறதோ வாழ்க்கை தந்த காயங்கள் வலியின் வரியாக வரையுதே அழகான விடியலொன்று அண்மையிலே நெருங்கி வரும் மெய்யான என் புன்னகை மீண்டும் மலரும் முகத்திலே திரும்பி வரும் புன்னகையில் தொடங்கட்டும் எம் புதுவாழ்வு..