உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தேவகஜன் சுவிஸ்

தேவகஜன் சுவிஸ்

என் கண்கள் பலரை பார்த்து ரசித்திருக்கலாம் ஆனால் என் இதயம் உன்னை! மட்டுமே எப்போதும் ரசித்துக்கொண்டிருக்கிறது. நீ என் ராசிக்காறி என்னுள் நுழைந்த இடர்களை உன் பேரன்பு சுடரால் அகற்றி இன்பம் தந்தவள் நீ! இருகரம் கூப்பி நல்லருள்தாவென இறைவனிடம் வேண்டிய வேண்டுதல்கள் உன் திருமுகம் கண்ட நாள்முதலாய் என் வாழ்வில் பலித்துக்கொள்ள நானோ மிளிர்ந்து கொண்டேயிருக்கின்றேன். என்றைக்கும் உன் அன்பை தேடியே என் மனம் தவிக்கும் என் மீது அன்பு வைக்க உன்னை மிஞ்ச எவருமில்லை அதனால் தான் என்னவோ என் இதயம் உன்னை மட்டுமே நேசிக்கின்றது. உந்தன் முகம் பார்க்காமலும் உந்தன் குரல் கேட்காமலும் எனக்கு இனிமை கிடையாது என் இதயச்சுடரே! உன் வாழ்நாட்களுக்குள் என் விழிகள் மூடிடவேண்டும் நீயில்லா வாழ்க்கை சுடர்தராத திரியைபோன்றது. உனதன்பு பிடிப்போடு என் துடிப்பு அடங்கிடணும் அன்பே! என் ஆருயிரே!