உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தேடும் உறவுகளே...

தேடும் உறவுகளே...

ரஜனி அன்ரன் (B.A) தேடும் உறவுகளே.... 28.08.2025 தேசத்தின் வரலாற்றில் வலியும்வடுவும் மிகுந்த சோகத்தின் உச்சக்கட்டம் உறவுகளைத் தேடும்படலம் பாசவலையாகிக் கடந்தது பதினாறுஆண்டுகள் தேடும் உறவுகளைத் தேடித்தேடி தேகமே நடைப்பிணமாகிய வேளை புதைகுழிக்குள் எச்சங்களும் உறுதியாகிட தேடும்உறவுகளின் கனவுகளும் கானலானதே ! தேடும் உறவுகளே உம்தேகங்களை குழிதோண்டிப் புதைத்தாலும் உண்மைகளை உணர்வுகளை ஒருபோதும் புதைக்க முடியாதே ஒருநாள் நீதியின் கதவுகளை தட்டுமே ஆத்மாக்கள் அப்போது கண்ணீருக்கும் விடைகிடைக்குமே ! எச்சங்கள் மீதமாய் கிடந்தாலும் மிச்சமாய் துடிக்குது நியாயம் கேட்கும் இதயம் ஒவ்வொரு எலும்பும் ஒருகதை சொல்லும் மெளனங்கள் முழங்க உணர்வும் சாட்சியாகுமே ! https://www.youtube.com/watch?v=RPB3nqN61V4