உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

" துளிர்ப்பாகும் வசந்தம் "

" துளிர்ப்பாகும் வசந்தம் "

ரஜனி அன்ரன் (B.A) “ துளிர்ப்பாகும் வசந்தம் “ 03.04.2025 வண்ணக் கதிரவன் ஒளிவீச வாடையும் மெல்ல விலகிட தருக்களெல்லாம் கருக்கொள்ள மொட்டுக்கள் முகையவிழ்த்து மலர்வனமாய் வனப்பூட்டும் வசந்தம் மனதிற்கு மகிழ்வூட்டும் தருணம் ! வசந்தம் துளிர்ப்பானால் வாழ்வு முழுமையும் புதுமையே துளிர்க்கும் இலைகளும் இசைபாட துள்ளிக் குதிக்குமே மனமும் பச்சை கனிந்து மலர இச்சை கொள்ளுமே மனமும் ! பனித்துளிகள் மலர்களை நனைக்க பட்சிகள் இராகம் இசைக்க மலர்கள் திறந்து முகம்காட்ட மழைத்துளியும் மலர்களை முத்தமிட பூமகள் மேனியைப் பூக்களும் அழகாக்க மேதினியே ஜொலிக்குது வசந்தத்தாலே துளிர்ப்பாகும் வசந்தம் நல்மனங்களை வனப்பாக்கட்டும் ! https://www.youtube.com/watch?v=yEZla6SH6Nc