உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

" துறவு பூண்ட உறவுகள் "

" துறவு பூண்ட உறவுகள் "

ரஜனி அன்ரன் ((B.A) “ துறவு பூண்ட உறவுகள் “ 30.10.2025 துறவு என்பது வெறுப்பல்ல உறவை வெறுத்து பேரன்பின் எல்லைகாண படகாய் இருந்த உறவுப்பற்றை வெறுத்து பந்தபாசம் தனைஒறுத்து இனிமை வாழ்வு கசந்துபோக துயரக்கலவை வாழ்வை அணைக்க உறவுச்சங்கிலியும் அறுந்துபோக துறவினைநாடி பரமனை அடைவார் துறவிகள் ! தூரதேசம் தன்னில் துறவுபூண்ட உறவுகளாய் உறவுகளுக்காய் ஆசாபாசம் துறந்து அல்லும்பகலும் அயராது உழைத்து குடும்பத்திற்காகவே தம்மையொறுத்து துறவிகளாகவே வாழ்வினைத் தொலைத்து பிறவிப்பயனின் பெருமைபேணும் இளைஞர்கள் வாழ்வும் கேள்விக்குறியே ! உதிரும்சருகாக உறவுகளும் ஓர்நாளில் பிரிய பிரிவுத்துயரும் மனதைவாட்ட புன்னகைபூத்த நினைவுகளெல்லாம் சுமையாக நிலையில்லாத வாழ்வில் துறவே நிலையாம் ! https://www.youtube.com/watch?v=ooL60qPhShw