உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

துறவு பூண்ட உறவுகள்

துறவு பூண்ட உறவுகள்

சிவதர்சனி இராகவன் வியாழன் கவி 2233!! துறவு பூண்ட உறவுகள்.. உறவாகி உளம் நாடி உயிர் கூடிப் பிறத்தல் நறவாகி நனி சிறந்து நலம் கோடி பெறுதல் அறம் போல இறை வரமாய் இணைதல் இதனாலே குலம் நலம் கோடி பெறுதல்.. துறவாகி துணை விலகி துயர் சுமக்கும் நிலைகள் உதரத்தும் உதிரத்தும் துணை மறந்த இடர்கள் தூரத்தே தள்ளி வைத்து ஏனிந்த கலக்கங்கள் புலம் பெயர்வில் புலன் இழந்தே வாடும் நிலைகள் இன்னும் ஏனோ கண் இருந்தும் பார்வை இலா வறுமை.. சிவதர்சனி இராகவன் 30/10/2025