உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தீதும் நன்றும்

தீதும் நன்றும்

தீதும் நன்றும் ஆயிரம் பொய்பேசினாலும் நன்மை செய்துவிடு ஆபத்து இல்லாத வழிமுறையில் நின்றுவிடு தீமையைக் கண்டதும் பயந்தும் போகாதே தீமையை சாய்க்கும் செயலில் இறங்கிவிடு வளத்தைப் பெருக்கவும் தீதும் வந்து கெளவும் தீரமாக முயற்சியினால் முன்னேறிக் கொள்வாய் ஒன்றையிழந்துதான் ஒன்றைப் பெறவேண்டும் தீதுமே நன்றாக அமையும் ஓர்நாள் வாழும் போதினிலே எத்தனை மாற்றம் மாற்றியும் அமைக்க எத்தனை திட்டம் மறுக்க நினைத்தாலும் வெற்றிகொள்ள முடியாத நிற்பந்தம் அகமும் புறமும் ஒன்றா கூறு ஐயம் கொண்டால் அமைதி போகும் இன்னல் வந்தால் மகிழ்வு போகும் எதையும் தாங்கியும் நிற்கும் போதிலே எல்லாம் நன்மை என்றே கொள்வோம் சர்வேஸ்வரி சிவருபன்