உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திருமதி.பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

திருமதி.பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு -212 தலைப்பு - மொழி மொழியின் ஆரம்பம் சைகையில் பிறந்தது மௌனங்கள் கலைந்து மதஇனம் பெருகியது கலாச்சாரம் வரலாறு அடிச்சுவடு கூற உருவான அதிசயம் உலக மொழிகளாம். தென் பொதிகையின் தென்றல் மொழி கம்பன் கையினில் தவழ்ந்த மொழி வள்ளுவன் வகுத்த வாழ்க்கை மொழி பாரதியின் புதுமைப்பெண்னை உருவாக்கிய மொழி. மொழிகளின் தாயகமாய் முச்சங்கம் வளர்த்த இலக்கண ஆளுமையோடும் இலக்கியச் சுவையோடும் வீறுநடை போடும் மொழியான செந்தமிழை தாய்மொழியாய் அடைந்தது நான்பெற்ற பாக்கியமே. நன்றி வணக்கம் 🙏 திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன். London 25/02/2023