உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திருமதி.பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்

திருமதி.பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர்🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு — 156 தலைப்பு — இலக்கு நல்லதையே நினைத்து நம்பிக்கையுடன் உழைத்து நல்லுயர்நிலை இலக்கை நாட்டிடின் ஆங்கு செல்வமாய் பெரும்புகழ் சேர்வதோடு வருவரது வல்லவரென்ற நற்பெயரும் வாழும் நீடு! அழுக்காய் மோசடிகள் ஊழலுடன் இணைந்திருக்க பழுத்ததும் மற்றதும் அழுக்குள் விழமுயற்சிக்க அழுக்கை அகற்றிடும் இலக்குடன் துணிந்து முழுமனதுடன் முயற்சித்தால் முளைத்திடும் நற்சூழல். மனதைச் சுத்தமாய் மகிழ்வுடன் வைத்து பணத்துக்காய் நேர்மையை பயிரிடாது பாதுகாத்து உணர்ந்து மரியாதையுடன் அனைவரையும் மதித்து அன்புகாட்டி ஆதரவளித்தால் உதயமாகும் நல்லமைதி. நன்றி வணக்கம் 🙏 திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன் London 03/01/2022