உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

******பாமுகமே வாழி***** மழலை மொழியில் மகிழ்தமிழ் கானம்// விழவுகள் பொன்னில் விரும்பும் அரும்பு// பழந்தமிழ் போற்றிடும் பாமுகம் எம்மில்// நிழலாய் தொடர நிலைத்து. பைந்தமிழ் பாமுகப் பார்மகள் தீபமாய்// வையகம் வாழ்த்திட வான்குன்றில் நின்றொளிர // மையலும் கொண்டே மயங்கிய மாந்தரும்// கைகூப்பி நின்றாரே காண். நாவலர் பேணிய நற்றமிழை நாளுமே// தேவரீர் பாமுகம் தேசத்தே காத்திட// ஆவலால் ஆக்கம் அனுதினம் ஆற்றவே// பாவலர் போற்றிடப் பாங்கு.