உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திருமதி .அபிராமி கவிதாசன்.

திருமதி .அபிராமி கவிதாசன்.

29.06.2022 சந்தம் சிந்து சந்திப்பு வாரம் 179 கவித்தலைப்பு ! “ பிரிவு துயர்” பிரியா வரம்வேண்டும் பெருங்கொடுமை பிரிவுதுயர் பிரிந்திட இழந்திடும் பிள்ளைகளின் துடிக்கும்உயிர் // கண்களுக்குள் வைத்திருந்த களையாத ஓவியம் மண்ணுக்குள் மறைந்தன மனிதஇனக் காவியம் // நினைந்து நினைந்து நித்தமும் தேடியும் வினைமுடிந்து மீண்டெழுந்து வீடுவரா ஓடின // உறவாடி மகிழ்ந்தயுள்ளம் உயிரைத்தேடி ஏங்கின பிறந்திடவேண்டுஎன் பிள்ளையென தாங்கிட // ஓயாது ஒலித்தகுரல் ஓசையற்று உருகியதே தீயான ஒளிதீபம் திரியற்று கருகியதே // உறவினுள் பகைத்தஉயிர் உலகினை துறந்திடவே இறந்த செய்தியின்பின் இதயம் திறந்தனரே // உருவமற்ற உலகினிலே உலாவரும் என்மனமோ அருவியாகி விழிகளும் அன்பாலே புண்மனமே // நன்றி வணக்கம் 🙏