உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திருமதி.அபிராமி கவிதாசன்.

திருமதி.அபிராமி கவிதாசன்.

21.06.2022 சந்தம் சிந்தும் சந்திப்பு .. வாரம் -178 / தலைப்பு ! “தந்தைக்கோர் தாலாட்டு” ( வெண்செந்துறை ) ஆராரோ பாடுகிறேன் அப்பா கண்ணுறங்க சீராட்டி வளர்த்தஎன் செல்லமே கண்ணுறங்க // தாயாக மாறிநான் தாலாட்டு பாடிடவா நோயாலே வீழ்ந்தீரே நோன்பிருந்து தேற்றிடவா // மாத்திரை விழுங்கவைத்து மடிமீது தாங்கிடவா காத்திருந்து கண்விழித்து கருமவினை போக்கிடவா // உடம்பெல்லாம் வலிக்கிறதா ஒத்தடம் வைத்திடவா படபடக்கும் இதயத்துக்கு பணிவிடை நான்செய்திடவா // தள்ளாடும்்வயதினிலே தூணாக இருந்திடவா உள்ளன்பை உணர்ந்துநான் உரையாட வந்திடவா // படுக்கையிலே என்தந்தை பார்ப்பதற்கு முடியலையே உடலிங்கு இருக்கிறது உள்ளமெண்ணி துடிக்கிறது // அருகினில் இருந்திருந்தால் அத்துனையும் செய்திருப்பேன் உருகியே புலம்புகிறேன் உள்ளுக்குள் அழுகின்றேன் // ———————————————- கவிப் பார்வைக்கும் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தும் தங்கள் பெரும்பணிக்கும் என்மனமார்ந்த நனிமிகுந்த நன்றிகள். நன்றி நன்றி பாவை அண்ணா🙏 அதிபர் அவர்களுக்கும் நன்றி. வாழ்க வளமுடன் 🙏