உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திருமதி அபிராமி கவிதாசன்.

திருமதி அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம் -173. 09.06.2022 தலைப்பு ! “அன்றிட்டதீ நிழலாடும் நினைவுகள்” அன்றிட்ட தீ நிழலாடும் நினைவுகள் தோன்றிட நெஞ்சினில் துளைக்குதே இதயத்தை // அறிஞர்களின் போதிமரம் அறிவுப்பெட்டகம் யாழ்நகர் அறியாமையின் இருள்களைந்த அகல்தீபம் நூலகம்// வாசிப்பு விதைதூவி விருட்சமான கல்விக்கூடம் நேசிப்போர் நெஞ்சத்தில் நிறைந்திட்ட கலைக்கூடம் // இல்லத்து நூலகம் இலங்கை நூலகம் சொல்வலிமைப் பிறப்பெடுத்து சோலையான தமிழ் வனம் // சோலைவன மலர்த்தோட்டம் சோதனையின் உயிரோட்டம் பாலைவனமாய் எரியூட்டப்பட்டு பாலில்நஞ்சு கலந்த நாள் // தமிழகநூலகம் எரிப்புநாள் தமிழர்களின இதயம்பிழப்புநாள் அமிழ்துமொழி அழகுதமிழ் அன்னைமொழி இழப்புநாள் கல்லறையான தமிழரின் கரைபடிந்த காவியம் இல்லறமும் எரிந்துபோனதாய் இதயவேதனை ஓவியம் // கலைக் களஞ்சியமான கல்விச் சாலை கல்லறையான காட்சி தோற்றம் விலையென்ன கொடுத்தாலும் வாங்க முடியுயா வாணிபம் // நிகழ்வை நேரில்கண்டு நெஞ்சம் பொறுக்காது அகம் நொந்து உயிர்விட்ட அணைந்த உன்னதரும் உண்டு // சிங்கள பேரழிவுக்கார சினவேட்டை கொடுமை அங்கம் நடுங்கும் அழிப்புதினம் தொடக்கம் // எங்கே நல்லநூல்கள் எரிக்கப் படுகின்றனவோ அங்கே நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் // படிப் படியான அடுக்குமாடி பாழ்பட்ட போராட்டம் துடிதுடிக்க கருகிமாண்டு துன்பம் கண்ட இருண்டகாலம் // மீண்டும் மீண்டும் மாண்டெழுந்து் மடிந்தன அண்டாண்டு ஆவணங்கள் அழிந்து ஒழிந்தன // அடையாள தமிழரின் அழிப்பு யாழ் நூலகம விடைபெற முடியாது விதி போட்ட தாளது // விதைக்கப்பட்ட வித்துகள் விருட்சம் சாம்பலாகி புதைக்கப்பட்ட உயிரிழப்பு புன்னகை இழப்புநாள் // கலைமகள் கல்விதாயின் கலைக்கோபுரம் கரிகியநாள் சிலையாகி தமிழர்கள் சிறகொடிந்து துடித்தனர் // ஆராதவடுவான அடையாளஅழிப்பு நாள் தீராத துன்பங்கள் தீவினை சூழ்ந்தநாள் //