உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திருமதி.அபிராமி கவிதாசன்.

திருமதி.அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக….07.06.2022 தலைப்பு ! “பழமை” நெடுநாள் நட்புறவே நெறிபிறழா அன்புறவே வெடுக்கென என்னைநீ விட்டுப்பிரிய பொறுக்கலையே // ஓராண்டா ஈராண்டா ஒன்றான நம்நட்பு தோராயமின்றி ஆண்டான்டாய் தோன்றியதே நீண்டகாலம் // மாண்டாலும் மறையாத மாண்புடை புகழரசி ஆண்ட வாழ்விற்கு அர்த்தம்நீயன்றோ // தொன்மை உறவின் தோழமை நட்பு மென்மை மக்கள் மேன்மக்கள் மேன்மக்களே // முதன்மை வித்தே முத்தான சொத்தே முத்தமிழ் தாயின் முத்திரை நீயன்றோ // கவிப் பார்வை …தொகுப்பாளர் கவிஞர் பாவை அண்ணா அவர்களுக்கும் அதிபர் அவர்களுக்கும் என்மனமார்ந்த நனிநன்றிகள்🙏