உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திருமதி. அபிராமி கவிதாசன்.

திருமதி. அபிராமி கவிதாசன்.

30.05.2023 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-225 தலைப்பு ! மூண்ட தீ” மூண்டதீ பிளம்பில் மாண்ட உயிர்களே ! ஆண்டுகள் கடந்தும் அணையா ரணங்களே ! வேண்டும் தாய்நாடென வெந்தழிந்த உடல்களே! நீண்டநாள் போராடியும் நிலைபெறாத அலைகளே ! ஆண்டவன் பூமியென ஆழத்துடித்த மறவர்களே ! சீண்டி அழைத்தே சினம்கொள்ள செய்தார்களே ! தீண்டியே உயிர்களை தீக்இரை கொடுத்தார்களே ! மாண்டும் மண்ணில் மறைத்திடத் துடித்தார்களே ! ஊண்உயிர் இழந்தும் உறவையே பிரித்தார்களே ! வேண்டுமென்றே அனைத்தையும் வேரோடு பிடுங்கினார்களே ! வேண்டாமென்ற வேதனையைமட்டும் விடைபெறாது வைத்தார்களே ! தாண்டிஎல்லை சென்றாலும் தசையாடி துடித்தீர்களே ! நன்றி வணக்கம் 🙏🏻