உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திருமதி. அபிராமி கவிதாசன்

திருமதி. அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-223 - 23.05.2023 பதினெட்டு வைகாசி முள்ளிவாய்க்கால் பல்லுயிரை பலிகொண்ட விசவாய்க்கால் சதிசெய்து தமிழினத்தை அழித்தநாள் சந்ததியே இல்லாமல் ஒழித்தநாள் விதியாகி வெடிமருந்தில் சிதறிடவே விலையாக உயிர்களும் இறைந்தனவே கதியற்று கருமருந்தால் பொசிந்திடவே கனப்பொழுதில் கரியாக்கி குவித்திடவே இதிகாச வரலாற்றில் இதுவோர் இனஅழிப்பு தினமாக பதிவிட்டோர் நதியாகி குருதியும் ஓடியதே நயவஞ்சர் வெற்றிகோசம் பாடியதே பதியிழந்த மனைவிகளாய் பலருண்டு பட்டமர வாழ்ககையாய் பாவியுண்டு / அபிராமி (கவிதன் )