உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திருமதி. அபிராமி கவிதாசன்.

திருமதி. அபிராமி கவிதாசன்.

10.01.2023 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 205 விருப்புத் தலைப்பு ! “தாயே தமிழ்த்தாயே போற்றி” 🙏🌷 தமிழ்மகனை தரணிக்கு தந்த தாயே அமிழ்து மொழியினை அடுக்கிபேச கற்றுத்தந்தாயே // முத்தமிழ் பெற்றெடுத்த முக்கனி சொற்சுவையே இத்தரணி தமிழ்கமழ இதயத்தாய் வைத்தாயே// அல்லும் பகலும் அயராது தமிழுக்கே சொல்லாலும் செயலாலும் சொல்லித் தந்தாயே // எத்துணை தமிழ்ப்பற்றை எண்ணிநீர் விதைத்தீரோ அத்துணை அறுவடையும் அன்புஇளையோர் இடம்தாயே // என்னதவம் செய்தீரோ என்றும்மை பெருமைசெய்யும் நன்னெறி மகவொன்றை நற்றமிழுக்காய் ஈன்றதாயே // புலிபரல் தங்கிச்சென்ற புன்னிய கற்க்குகையே வலிமை வித்திட்டு வழித்தடம் வகுத்தாயே // நின்புகழ் பாடிட நித்தமும் பெருமிதமே என்தாயாய் எண்ணியே ஏற்றுகிறேன் தீபமே // நன்றி 🙏🌷🌷🌷🌷 கவிஞர் பாவை …அண்ணா அவர்களின்….. கவிப்பார்வை , தட்டிக்கொடுப்புக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்🙏